scorecardresearch

பிற்பகல் தேர்வு நல்லாருக்கு – பத்தாம் வகுப்பு மாணவர்கள்

எந்த பதற்றமும் இல்லாமல், தேர்வு மையத்தை அடைவதற்கு பிற்பகல் வசதியாக இருந்தது.

பிற்பகல் தேர்வு நல்லாருக்கு – பத்தாம் வகுப்பு மாணவர்கள்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் பிற்பகலில் நடக்கின்றன.

மற்ற பாடங்கள் வழக்கம் போல் காலையில் நடைபெறும் என ஏற்கனவே அட்டவணை வெளியாகியது. ஆனால், பொதுத் தேர்வைப் பொறுத்தவரை அனைத்துப் பாடங்களுக்கும் காலையில் தேர்வு நடப்பது தான் இது வரை நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது, இந்த முறை சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வெழுதி விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் கேட்ட போது, “எந்த பதற்றமும் இல்லாமல், தேர்வு மையத்தை அடைவதற்கு பிற்பகல் வசதியாக இருந்தது. அதோடு படித்தவற்றை மீண்டும் திருப்பிப் பார்க்க, நேரம் கிடைத்தது” என்றனர்.

இருப்பினும் சென்னை, திருச்சி, வேலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெயிலால் சற்று அவதியுற்றது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Students about sslc board exam pattern