சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்: டிச. 23 வரை விடுமுறை அறிவிப்பு

CAA Protest in Chennai : குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால்,வரும் டிசம்பர் 23ம் தேதி வரை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

By: Updated: December 18, 2019, 12:41:53 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதிற்க்கு எதிராகவும் சென்னையில் பல கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

 

 

 

மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும்  சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தம் சட்ட மசோதா பிரிவினை வாதத்தையும், மத வாதத்தையும் ஊக்குவிக்கும் என்று மானவர்கள் போராட்டத்தில் குரல் எழுப்பினர்.

 

 

 

அதனைத் தொடர்ந்து, நிர்வாகம் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறையளித்து உத்தரவிட்டுள்ளது . ஏற்கனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.,24 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை காலை ட்ரிப்ளிகேன் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலிஸ்தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில்  ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக  மாணவர்கள் பறை அடித்து உணர்வை வெளிபடுத்திகின்றனர்.

 

 

 

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் அறிவியில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தம் சட்டம் எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

 

 

கடந்த திங்களன்று, ஐ.ஐ.டி-மெட்ராஸ் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள மற்றவர்கள் போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Students at madras university protest against the citizenship amendment act students agitation against the caa act

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement