ஸ்ரீரங்கத்தில் வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்; என்ன நடந்தது?

நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில்a ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில்a ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Students boycotted classes at Ayyanar Corporation School Srirangam and staged a protest

ஸ்ரீரங்கம் அய்யனார் மாநகராட்சி பள்ளியில் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஸ்ரீரங்கம் மேலூரில் அய்யனார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 240 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் இடவசதி கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான உயர் நிலைப்பள்ளியை மேலூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இந்தப் பள்ளி இடமாற்றம் காரணமாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் செல்ல வேண்டி இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோர், மாணவர்களும் பலகட்ட போராட்டங்களையும் நடத்தியநிலையில் மீண்டும் பள்ளி இடமாற்ற நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (ஆக.7) வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், பெற்றோர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் விரைந்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதுடன் இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவர்கள் அமைதியாக மீண்டும் வகுப்புக்கு திரும்பினர்.

Advertisment
Advertisements

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்; பள்ளிக்குத் தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்ட ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை இடம் தருவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு பள்ளி இடமாற்றம் செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

எந்த காரணத்தை கொண்டும் பள்ளி இடமாற்றத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதனால் எங்களது போராட்டத்தை ஒத்தி வைத்திருக்கின்றோம். மேலும், தற்போதுள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் பள்ளி கல்வித்துறை விடுத்திருக்கின்றோம் என்றனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: