கோவை மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு செய்தார். விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் தேவைகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் உணவு சரியில்லை என்று குற்றம் புகார் தெரிவித்தனர். மேலும், கழிவறைகளை சரிவர பராமரிப்பதில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/22/inspects-govi-chezhiyaan-4.jpeg)
உடனடியாக விடுதி அலுவலர்களிடம் இது குறித்து கேட்டறிந்து மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தந்த அறைகளுக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் உடனடியாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், மாணவர்கள் பேராசிரியர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கழிவறை வசதிகள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் சரி செய்து தரப்படும் என கூறினார். மேலும், உணவு பட்டியல் தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/22/inspects-govi-chezhiyaan-6.jpeg)
தொடர்ந்து பேசிய விடுதி மாணவர்கள், கல்லூரி விடுதியில் உணவு சரியில்லை என்றும் தீபாவளி முடிந்த பிறகு தற்போது வரை கழிவறை சுத்தமாக இல்லை என்று கூறினர்.
மேலும், தற்பொழுது உள்ள மெம்பர் குழுவை கலைத்துவிட்டு புதிதாக மெம்பர் குழு அமைத்து அதில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள, ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர் என எல்லாரும் இடம் பெற்றிருக்க வேண்டும், அதில் அளிக்கப்படும் தகவல்களை ரகசியமாக வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முறையாக உணவு வழங்கவில்லை என்றும் அதில் சில குளறுபடிகள் இருப்பதாகவும் மாணவர்கள் உணவு தரம் குறித்து குறிப்பேடு வைத்துள்ளதாகவும் அதனை ஆசிரியர்கள் படித்து அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/22/inspects-govi-chezhiyaan-5.jpeg)
விடுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாத காரணத்தினால் இங்கு இருக்கும் மாணவர்களுக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
இந்த விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி வருவதாகவும் அதில் ஒரு அறைக்கு 8 மாணவர்களுக்கு 6 கட்டில்கள் மட்டுமே உள்ளது என்று கூறிய மாணவர்கள் போதிய தங்கும் வசதி இல்லை என்றும் விடுதியில் உணவு சரியில்லை உணவு ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும் இதற்கு அதிகாரிகள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களும் அதை பத்தி பேசுவதில்லை என்று குற்றம் சாட்டினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“