தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்த மாணவர்கள்: பணியிட மாற்றம் செய்து உத்தரவு

இதனிடையே, மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வலர் விஜயகு​மார், வட்​டாட்​சி​யர் பெரு​மாள், வரு​வாய் ஆய்​வாளர் சத்​யபிரியா ஆகியோர் பள்​ளிக்கு நேரில் சென்​று, சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியர் மற்​றும் மாணவ, மாணவி​களிடம் விசா​ரணை மேற்​கொண்டனர்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-09-03 at 15.57.31_1ce299f8 (1)

தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டுள்​ளார்.

Advertisment

அரூர் அரு​கே​யுள்ள மாவேரிப்​பட்டி கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 30-க்​கும் மேற்பட்ட மாணவ, மாணவி​கள் பயில்​கின்​றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்​நிலையில், தலைமை ஆசிரியை கலை​வாணிக்கு மாணவ, மாணவி​கள் கை, கால்​களை அழுத்தி விட்டு மசாஜ் செய்​யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகப் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யுற்ற பெற்​றோர் நேற்று காலை பள்​ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்​து, பள்​ளியை முற்​றுகை​யிட்​டனர்.

இதனிடையே, மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வலர் விஜயகு​மார், வட்​டாட்​சி​யர் பெரு​மாள், வரு​வாய் ஆய்​வாளர் சத்​யபிரியா ஆகியோர் பள்​ளிக்கு நேரில் சென்​று, சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியர் மற்​றும் மாணவ, மாணவி​களிடம் விசா​ரணை மேற்​கொண்டனர்.

இதுகுறித்து மாணவர்​களின் பெற்​றோர் கூறும்​போது, 'பல்​வேறு நாட்​களில் மாணவ, மாணவி​களை கை, கால்​களை அழுத்​தி​விட சொல்​வ​தாக​வும், இதுகுறித்து பெற்​றோரிடம் கூறக்​கூ​டாது எனவும் மாணவர்​களை தலைமை ஆசிரியர் மிரட்​டு​கிறார். மாணவர்களிடம் அத்​து​மீறி நடந்த தலைமை ஆசிரியை மீது உடனடி​யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்' என்று தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

கல்​வித் துறை அதி​காரி​கள் கூறும்​போது, 'வி​சா​ரணை​யைத் தொடர்ந்​து, மாவட்ட நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தல்​படி, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளார். அவருக்​குப் பதிலாக வேறு ஆசிரியர் உடனடி​யாக பணி​யில் இணைவார்' என்​றனர்​.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: