பொறியியல் படிப்புகளை தமிழில் கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் - அண்ணா பல். துணை வேந்தர்

ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படுவதால் அங்குள்ளவர்கள் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படுவதால் அங்குள்ளவர்கள் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
 Tamil Nadu news in tamil: 1,43,774 candidates registered for Engineering says TNEA

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் நிகழ்வு ஒன்றில் பேசிய அப்பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை மக்கள் தங்கள் மொழிகளில் படித்தால் நன்றாகக் கற்க முடியும் என்பதால் மாணவர்கள் தங்களின் தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisment

ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படுவதால் அங்குள்ளவர்கள் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளார்.

பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளை தமிழில் கற்பது மாணவர்கள் சிறந்த தொழில் வல்லுநர்களாக மாற உதவும் என்றும் தமிழகத்தை மேம்படுத்த தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவரது அறிக்கைகள் உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. ஏன் என்றால் சமீபத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நடத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 44 சதவீத மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் பொறியியல் படிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், தமிழ் மற்றும் இந்தி மிகவும் விருப்பமான மொழித்தேர்வாக மாணவர்கள் மத்தியில் அமைந்துள்ளது.

Advertisment
Advertisements

மக்கள் மற்ற மொழிகளைக் கற்கலாம். ஆனால், முதலில் தாய்மொழியை கற்று ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் அரசுப் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் தாய்மொழியை வளர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: