ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை; போராட்டத்தில் குதித்த மாணவர் அமைப்புகள்

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர் அமைப்புகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By: Published: November 14, 2019, 3:56:02 PM

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர் அமைப்புகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா புதன்கிழமை கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம் என்று அவருடைய மொபைல் போனில் குறிப்பிட்டிருந்ததால் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக இந்தியாவின் உயர்க்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் சாதி, மத பாகுபாடுகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்துவருகிறது. ஃபாத்திமாவும் மத அடிப்படையில் பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயர்க்கல்வி நிறுவனங்களில் நிலவும் இத்தகைய ஆபத்தான பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சென்னை ஐஐடி நிறுவனத்தின் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பிரிவினர் மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று முழக்கமிட்டனர். மேலும், மாணவி ஃபாத்திமாவின் தற்கொலைக்கு காரணமான சுதர்ஷன் பத்மநாபனை ஐஐடியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்திய மாணவர் சங்கத்த்தைச் சேர்ந்த மாணவர்கள் ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உயர்க்கல்வி நிறுவனங்களில் சாதி மத ரீதியாக பாகுபாடுகள் துன்புறுத்தல்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க வேண்டும். மாணவர்களை சாதி மத ரீதியாக துன்புறுத்தும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஃபாத்திமாவின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தவறிழைத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Students protest justice for fathima latheef suicide in iit madras by communal discrimination

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X