மாற்றம் என்பது சொல் அல்ல செயல்: தாமிரபரணியை காக்க களம் இறங்கிய மாணவர் படை!

ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணியும் போது ஆற்றங்கரையில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணியும் போது ஆற்றங்கரையில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

author-image
WebDesk
New Update
Students were involved in cleaning the Tamiraparani river

தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜடாயுத் தீர்த்த தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணியானது சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணியும் போது ஆற்றங்கரையில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

Advertisment

பிளாஸ்டிக் குப்பைகள் ஆற்றங்கரையில் இருந்து அகற்றப்பட்டு அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஆற்றின் கரையில் இருந்த ஆகாயத்தாமரைகள் தன்னார்வலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அருகங்குளத்திற்கு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றினை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் க. செல்வன் தலைமையில் நடைபெற்றது .

இந்தத் தூய்மை பணியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், ஆப்தமித்ரா தன்னார்வலர்கள், எக்ஸ் பவுண்டேஷன் அமைப்பினர் மற்றும் வி எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment
Advertisements

இந்தச் சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 8 மணியிலிருந்து மதியம் 10:30 மணி வரை நடந்தது. இன்று நடைபெற்ற தாமிரபரணி தூய்மை பணியின் போது தொண்டாற்றிய 50-க்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு, வாட்டாசியர் க.செல்வன் தனது சொந்த செலவில் காலை உணவு வழங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: