Su. Venkatesan | மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் ட்விட்டரில் கேள்வி ஒன்று எழுப்பியள்ளார். அந்தக் கேள்வியில், “அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் .
ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர .
தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? என வினாவியுள்ளார். ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையயுள்ள இடத்தில் செல்பி எடுத்து பிரபலம் ஆனார்.
இந்தப் புகைப்படங்கள் அகில இந்திய அளவில் பேசப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் அவர் எய்ம்ஸ் பிரச்னையை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், மதுரை எய்ம்ஸ்-க்கு ரூ.1,977 கோடி தேவை எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“