/tamil-ie/media/media_files/uploads/2021/09/su.jpg)
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டுக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே.
இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம். #Railwaypic.twitter.com/DVXmewGurE— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 26, 2021
அந்த கடிதத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " "உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களைச் சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவில்லையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம்" என தெரிவித்திருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.