தன்னிடம் கொடுத்தால் 100, ஆன்லைனில் கட்டினால் 800… போக்குவரத்து எஸ்.ஐ லஞ்சம் வாங்கும் வீடியோ

பூந்தமல்லி அருகே லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது

Sub inspector asking bribe video goes viral: பூந்தமல்லி அருகே லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றும் ராஜன் என்பவர் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலையில் போக்குவரத்து பணியில் இருந்தபோது லாரி ஓட்டுநரிடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது.

தன்னிடம் கொடுத்தால் 100 ரூபாய் ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் என மிரட்டி பணம் வாங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதேபோல் நான் சொல்றத கேட்டா எனக்கு சந்தோஷம்; நீ சொல்றத கேட்டா உனக்கு சந்தோஷம் என டயலாக் பேசி அடுத்தடுத்து மூன்று பேரிடம் லஞ்சம் வாங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதேபோல் லாரி உரிமையாளர்கள் எஞ்சின் ஸ்பேர் என 10 ஆயிரம், 20 ஆயிரம் செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் கேட்கும் 100, 50-க்கு கணக்கு பார்ப்பார்கள் என புலம்பியபடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்குவதை லாரி ஓட்டுநர் ஒருவர் அவரது செல்போனில் பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளரை சென்னை மேற்கு மாவட்ட போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sub inspector asking bribe video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com