பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Chennai
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தண்டவாளப் பராமரிப்பு பணி மற்றும்  என்ஜினீயரிங் பணிகளுக்காக இன்று (பிப்.11) பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisment

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித் தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாளப் பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் -  சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Train

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: