சுபஸ்ரீ-க்காக டிவிட்டர் டிரெண்டிங்: விஜய் சொன்னதை ஒரே நாளில் செய்து முடித்த ரசிகர் படை

விஜய் சொன்ன மறுநாளே அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதை நிறைவேற்றிக் காட்டியிருப்பது பலரது கவனத்தையும் திருப்பியிருக்கிறது.

Suba Shree Death: நடிகர் விஜய் சொன்னதை அடுத்த நாளே நிறைவேற்றி முடித்திருக்கிறார்கள், அவரது ரசிகர்கள். ஆம், டிவிட்டரில் #JusticeForSubaShree என அண்மையில் பேனர் விழுந்து விபத்தில் பலியான சுபஸ்ரீ-க்காக ட்ரெண்ட் செய்திருக்கிறார்கள்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘தளபதி’ விஜய் ரசிகர்கள் கில்லாடிகள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஆரம்பித்து, டீசர், ஆடியோ லாஞ்ச், படம் ரிலீஸ் என ஒவ்வொரு தருணத்திலும் டிவிட்டரில் உலக அளவிலும் ட்ரெண்ட் செய்யத் தயங்காதவர்கள். இடையிடையே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்களுடன் மோதல் உருவாகி, பரஸ்பரம் கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக்களும் ட்ரெண்ட் ஆவதுண்டு.


இது குறித்து நேற்று பிகில் ஆடியோ லாஞ்சில் சூசகமாக பேசிய விஜய், ‘சமூக வலைதளங்களில் ஒரு எல்லையைக் கடந்து செயல்பட்டால், யாருக்காக செயல்படுகிறோமோ அவர்களுக்கே அது வெறுப்பை உருவாக்கும். எது எதற்கோ ட்ரெண்ட் செய்கிறோம். சுபஸ்ரீ மரணம் மாதிரி விஷயங்களுக்கு நியாயம் கேட்டு ட்ரெண்ட் செய்யுங்கள்’ என்றார்.

அவர் சொன்ன மறுநாளே ட்விட்டரில் #JusticeForSubaShree என சுபஸ்ரீக்கு நீதி கேட்டு ட்ரெண்ட் செய்யும் பணியை தொடங்கினார்கள் விஜய் ரசிகர்கள். அது இன்று பிற்பகல் நிலவரப்படி ஒன்றேகால் லட்சம் ட்வீட்களைக் கடந்து இந்திய அளவில் 3-வது இடத்தில் இருந்தது.


விஜய் சொன்ன மறுநாளே அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதை நிறைவேற்றிக் காட்டியிருப்பது பலரது கவனத்தையும் திருப்பியிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close