Advertisment

பேனர் விபத்து - ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
subashri death banner accident subashri father claims 1 crore chennai high court - பேனர் விபத்து - ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு

subashri death banner accident subashri father claims 1 crore chennai high court - பேனர் விபத்து - ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு

பேனர் விபத்தில் இளம்பெண் பலியான விவகாரம் தொடர்பாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் சிறப்பு விசாரணை குழு விசாரணை கோரி அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணை அருகே அனுமதியின்றி வைத்த பேனர் விழுந்த்தில் சுபஸ்ரீ என்ற இளம் பெண்

மரணமடைந்தார் .

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயராமனை 12 நாட்கள் கழித்து கைது செய்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஒரு தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் கடந்த 18 ஆம் தேதி பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் சென்ற பொழுது அங்கு வைத்திருந்த அனுமதியில்லாத பேனர் விழுந்ததில் எனது மகள் கீழே விழுந்தால் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் எனது மகள் உயிரிழந்தார். இந்த விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமும் சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்கவோ அல்லது அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டவிரோத பேனர்களை அகற்ற ஏற்கனவே சட்டம் இருந்தும் அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.

தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்் கடந்த மாதம் 24 ஆம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தேன். அதே போல் சட்டவிரோதமாக அல்லது அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment