New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/a6.jpg)
சுபஸ்ரீ மரணம் - மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி
இந்த வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்
சுபஸ்ரீ மரணம் - மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த மனு தொடர்பாக நாளை மறுதினம் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.