/tamil-ie/media/media_files/uploads/2018/05/s83.jpg)
குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் (Rajini Publicity Activist) என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, "ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிகாந்துக்கு உண்டு. ரஜினியும், மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது எனது கருத்து” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார், "ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல், அரசியல் வேலையையும் பார்ப்பவராக உள்ளார். 'சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது' போல், சும்மா இருக்கும் ரஜினியை குருமூர்த்தி ஊதிக் கெடுக்க வேண்டாம்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய கருத்தை ஆட்சேபித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் (Rajini Publicity Activist) என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழகத்தில் பாஜகவும், கல்வி அறிவற்ற ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் பின் பெரிய அளவில் பணபலம் உள்ளது. ஊடகத்தினர் ஆடிட்டர் குருமூர்த்திய ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி என்றழைக்கின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ்ஸில் அப்படியொரு எந்தவொரு பதவியும் கிடையாது. அவரை ரஜினியின் விளம்பர ஆர்வலர் என்று அழைப்பது சிறப்பாக இருக்கும்'' என்று விமர்சித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.