பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் சில வழித் தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் வேறு வழித்தடங்களில் மாற்றப்பட்டும் இயக்கப்படுகின்றன. கொருக்குப்பேட்டை மற்றும் பேசின் பிரிட்ஜ் வழித் தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல்-கூடூர் பிரிவில் கொருக்குப்பேட்டை மற்றும் பேசின் பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே ஜூலை 13, 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை லைன் பிளாக்/சிக்னல் பிளாக் காரணமாக பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையிலும் செல்ல தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண். 43001, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அதிகாலை 12.15 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-ஆவடி வரை இயங்கும் மின்சார ரயில் இன்று ஜூலை 14 அன்று ரத்து செய்யப்படுகிறது.
அதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும்கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட் வளாகம், ரயில் எண். 42040, ஜூலை 13 அன்று கொருக்குப்பேட்டை மற்றும் மூர் மார்க்கெட் வளாகம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது. அதே சேவை ஜூலை 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரைக்கு திருப்பி விடப்படும்.
ரயில் எண். 66007 மூர் மார்க்கெட் வளாகம்-ஆவடி வரை இயங்கும் ரயில் ஜூலை 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“