/indian-express-tamil/media/media_files/2025/08/25/car-fire-accident-2025-08-25-13-05-08.jpg)
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கோவை அருகே காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(63). இவருக்கு காரமடை தண்ணீர் பந்தல் பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை உள்ளது. இந்த நிலையில் இன்று இவர் கடைக்கு சென்று விட்டு கோவை செல்வதற்காக தனது காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார்.
அப்போது, காரமடை மேம்பாலத்தின் அருகே திடீரென இவரது காரின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்து உள்ளது. உடனடியாக காரை நிறுத்திய வாசுதேவன் கீழே இறங்கி உள்ளார். இதன் இடையே திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீ ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வாளிகளில் தண்ணீரை எடுத்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காரமடை போலீஸ் எஸ்ஐ பாலகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கார் இன்ஜினில் இருந்த வயரிங் பழுது காரணமாக கார் தீப்பற்றி இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.