Advertisment

ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

ஸ்டெர்லைட் ஆலையில் வாயு கசிவு அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கசிவடைந்த கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.

Advertisment

ஸ்டொ்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தின் போது, சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து,  ஸ்டொ்லைட் ஆலையை மூடுவதாக முதல்வா் பழனிசாமி சட்டமன்றத்தில் ஆணை பிறப்பித்தாா்.

இந்நிலையில் ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு வெளியேறுவதாக நேற்று தகவல்கள் பரவத் தொடங்கின. இதனைத் தொடா்ந்து அம்மாவட்ட ஆட்சித் தலைவா் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசிய போது, 'ஸ்டொ்லைட் ஆலையால் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரசாயனக் கழிவு என்ற தகவல் குறித்து தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். ரசாயனக் கசிவு குறித்து மேலும் வதந்திகள் பரவக் கூடாது என்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது' என தெரிவித்தார்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று ஆய்வு செய்த போது வாயு கசிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் பேட்டியளித்த ஆட்சியர், "கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோனில் சிறிது கசிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இன்று முழுமையாக கசிவு சரிசெய்யப்பட்டு அகற்றப்படும். மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை" என தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், தாசில்தார்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலைக்குள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment