coimbatore | ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு கேரளாவிலிருந்து வரும் கட்டக்கொம்பன் யானையை தமிழ்நாடு வனத்துறையினர் சுள்ளி கொம்பன் என அழைக்கிறார்கள்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை கேரளா பெரியார் புலிகள் காப்பகம் பகுதிநெல்லியாம் பதிலிருந்து சேத்துமடை வழியாக காட்டூர் கணல் வழியாக தண்ணீர் பள்ளம், உப்பாரு ஆழியார் நவமலை பகுதிக்கு வந்து சேரும்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவமலை மின்சார ஊழியர் ஒட்டி வந்த காரை தந்தத்தால் தூக்கி வீசியது.
இதில் அதிர்ஷ்டவசமாக மின்சார ஊழியர் உயிர்த்தப்பினார். நவமலை சென்ற அரசு பஸ் துரத்தி கண்ணாடியை உடைத்தது. சின்னார் பதியில் மலைவாழ் மக்கள்மாயவன் வீட்டையும் சேதப்படுத்தியது.
பின் வால்பாறை சாலையில் வந்த மூன்று கார்களை தாக்கியது சொ சுள்ளிக்கொம்பன்,தற்போது நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆழியாரை நோக்கி நரிகல்பதி வழியாக வருவதால் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் ஆலாட் ,வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மூன்று கார்கள் தாக்கிய வழக்கில் ஆழியார் காவல் நிலையத்தில் சுள்ளிக் கொம்பன் மீது வழக்கு உள்ளது.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“