கோடை வெயிலில் அவதிப்பட்ட இளம் தாய்… கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்த காவலரின் மனிதநேயம்

கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Kovai news, Kovai summer heat, covai traffic police video goes viral, கோடை வெயிலில் அவதிப்பட்ட இளம் தாய்... கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்த காவலரின் மனிதநேயம் , Summer heat in Covai, Traffic police humanity, Traffic police take care newborn baby

கோடை வெயிலில் அவதிப்பட்ட இளம் தாய்... கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்த காவலரின் மனிதநேயம்

கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisment

கோவையில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும் தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். அப்போது இளம் பெண் வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்ததால், அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நின்றார்.

இதையடுத்து, அவரது தாய் உணவு வாங்கச் சென்ற நிலையில், இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமார் (27) கைக்குழந்தையை வாங்கி கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கை அமரக்கூறியதோடு தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

இதையடுத்து, அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும் குழந்தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார். இதையடுத்து, அவர்கள் கிளம்பிய போது, குழந்தையை கொடுத்து பத்திரமாக செல்ல அறிவுறுத்தினார். கடும் வேலைக்கு இடையே போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore Police

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: