தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 102 டிகரி பாரன்ஹீட்க்கு மேல் தான் வெப்பம் பதிவாகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளுக்கு உள்ளே முடங்கி உள்ளனர். வெப்ப அலையும் வீசுவதால் காற்று கூட சூடாக இருக்கிறது. பகல் நேரங்களில் மக்கள் காரணம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம், தண்ணீர் அதிகம் குடிக்கவும், கார்ட்ன் உடை உடுத்தவும் என அரசாங்கம், மருத்துவர்கள் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். வெப்பம் அதிகரித்து வருவதால்
பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“