மதுரை டூ ராஜஸ்தான்... கோடை விடுமுறை சிறப்பு ரயில் தொடக்கம்

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையில் இருந்து ராஜஸ்தான் வரை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையில் இருந்து ராஜஸ்தான் வரை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruchendur Express train Announced as super fast train, Tiruchendur Express train becomes as super fast train, Tiruchendur super fast train reach before 40 minutes, Tiruchendur super fast train, 40 நிமிடம் முன்கூட்டியே வந்து சேரும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயிலாக அறிவிப்பு, திருச்செந்தூர் சூப்பர் ஃபாஸ்ட் ரயில், Tiruchendur Express train Announced as super fast train

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

அதன்படி மதுரை - பகத் கீ கோத்தி சிறப்பு ரயில் (06067) மதுரையில் இருந்து ஏப்ரல் 21 காலை 10.45 மணிக்கு புறப்பட்டு ஏப்ரல் 23 மதியம் 12.30 மணிக்கு பகத் கீ கோத்தி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பகத் கீ கோத்தி - மதுரை சிறப்பு ரயில் (06068) பகத் கீ கோத்தியில் இருந்து ஏப்ரல் 24 அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு ஏப்ரல் 26 காலை 08.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இது ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், வார்தா, தன்மண்டேல், பட்னேரா, அகோலா, மால்காபூர், புஷாவால், ஜால்கன், நந்துர்பர், உத்னா, அங்கலேஸ்வர், வடோடரா, ஆனந்த், சபர்மதி, மகேசேனா, படண், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், மட்ரன், ஜலோர், மொகல்சர், சம்தாரி, லுனி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Special Trains Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: