கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து அனலின் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளது. மே 2ம் தேதி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடையின் உச்சமான 'அக்னி நட்சத்திரம்' வருகிற மே 4ம் தேதி தொடங்குகிறது. இது மே 29ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் கத்திரி வெயில் உக்கிரம் பெறும். இந்தஆண்டு 26 நாட்கள் கத்திரி வெயிலின் தாக்கம் நீடிக்கிறது
. அதேவேளை கோடை மழை நீடித்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்ப முடியும். வெயில் கால நோய் பரவலை தடுக்க சுகாதார துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். 26 நாட்கள் நீடிக்கும்: கோடையின் உச்சமான 'அக்னி நட்சத்திர' கத்திரி வெயிலின் தாக்கம், வருகிற மே 4ம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள் நீடிக்கும் என்பதால் இந்நாட்களில் அனல் வீசுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மேமாதங்களில் கோடைவெயில் கொளுத்துவது வழக்கம். மே மாதம் வெயிலின் தாக்கம் உச்சம்பெறும். இந்தாண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. ஏப்ரல் மாதம் துவங்கியது முதலே வெயில் அனலாய் தகித்தது. தமிழ்நாட்டில் பல நகரங்களில் வெப்பத்தின் பதிவு 100 முதல் 107 டிகிரிவரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil