New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/keerthana-4-2.jpg)
sun tv sun network admk election ads
sun tv sun network admk election ads
sun tv sun network admk election ads : தமிழகம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி விட்டனர். அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி விட்ட நிலையில்,. இன்னொரு பிரச்சார வடிவமாக தமிழக அரசின் சார்பில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் வீடியோ விளம்பரம் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக குறிப்பிடப்படுகிறது. இந்த விளம்பரத்தை இதுவரை பார்க்காதவர்கள் இங்கே காணுங்கள்.
அதிமுக அரசு விளம்பரம் அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் ஒளிப்பரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அதிகமான மக்களால் பார்க்கப்படும் சன் டிவியில் இந்த விளம்பரங்கள் ஒளிப்பரப்பட்டது பெரும் விவாதத்தை ட்விட்டரில் ஏற்படுத்தியுள்ளது. சன் டிவி திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமானது. திமுக சார்பில் அதிகாரப்பூர்வ கலைஞர் டிவி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சன் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகி வரும் தமிழக அரசின் சாதனை விளம்பரங்கள் குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் தர்மபுரி மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார்.
சேற்றில்/ஆற்றில் கால்
சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம்
ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை
அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது
திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் pic.twitter.com/Q0iAPvuP9W— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 30, 2020
அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்’ என்று பதிவிட்டு மாறன் சகோதரர்களை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் அவர், ”எங்களுக்கு தொழில் தான் முதல். அது தான் முக்கியம். திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது. திமுக விடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை, என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்துவிட்டு இது போல் விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பட்டும்’ என்றும் கூறியுள்ளார்.
'எங்களுக்கு தொழில் தான் முதல்.
அது தான் முக்கியம்.
திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது
திமுக விடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை,'
என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்து விட்டு
இது போல் விளம்பரங்களை
அவர்கள் ஒளிபரப்பட்டும். https://t.co/o67FfZNwMW— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 31, 2020
செந்தில் குமாரின் இந்த பதிவுக்கு திமுக ஆதரவாளர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.