scorecardresearch

திரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று

tamil nadu covid news in tamil, director sundar c tested positive corona: நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று திரைப்பட இயக்குனரும் நடிகருமான சுந்தர். சிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று திரைப்பட இயக்குனரும் நடிகருமான சுந்தர். சிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், நேற்று மாலை (10.04.2021) எனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நன்றாக இருக்கிறார். ஆனாலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உடனடியாக பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள், என்று பதிவிட்டுள்ளார்.

சுந்தர்.சி இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட தனது மனைவி குஷ்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sundar c tested positive corona news in tamil