தமிழ்நாட்டில் 2008 தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்த மறுஆய்வு வழக்கில் பிப்ரவரி.26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி. இவர் தற்போது தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கடந்த
2012-ம் ஆண்டு ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இ
இந்த வழக்கை விசாரித்த எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்தார்
இந்த நிலையில் கடந்த பிப்.13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்குகிறார்.
முன்னதாக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான வழக்கு ஒன்றில் ஆனந்த் வெங்கடேஷ் இதே போல் மறுஆய்வு வழக்குத் தொடர்ந்தார். இதில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“