சென்னையில் இன்று அதிவேக ரயில் சேவையான 'வந்தே பாரத்' வருகை தந்துள்ளது. சுமார் 130- 73 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடும் இந்த 'வந்தே பாரத்' ரயில் சேவையைக் கண்டு மக்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த ரயில் சேவை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் 504 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் வலிமை கொண்டது. இன்று சென்னையில் இருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொண்டது.
இந்திய ரயில்வே தடத்தில் மிக அதிவேக ரயில் சேவையாக வளம்வரும் இந்த 'வந்தே பாரத்', சென்னையில் இருந்து மைசூருக்கு தனது ஒத்திகை பயணத்தை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த வழி தடத்தை பொதுமக்களுக்கு இயக்கத்தில் விட திட்டமிட்டுள்ளனர்.
இந்த சேவையை வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது புது டெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத், குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய 4 வழித்தடங்களில் சீராக இயங்கப்பட்டு வருகிறது.
இதனின் அடுத்த கட்ட பயணமாக ஐந்தாவது வந்தே பாரத் ரயில், சென்னையில் இருந்து மைசூருக்கும் இயங்க, சோதனை ஓட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதிவேக ரயில் சேவையை கண்ட சென்னை மக்கள் அதனருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
காலை 5.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் சேவை, அரக்கோணம் வரை 130 கிலோமீட்டர் வேகம் பயன்படுகிறது. மேலும், காலை 8:50 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், 10:25 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்திற்கும் சென்றடையும் என்று கூறப்படுகிறது. அங்கு 5 நிமிடங்கள் நின்று பிறகு மீண்டும் 10:30க்கு புறப்பட்டு 12:30 மணிக்கு மைசூரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவை மீண்டும், மைசூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு 1 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு மாலை 4:45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இரவு 7:45 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil