Advertisment

ரஜினி அமெரிக்கா பயணம்: தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி

14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட அந்த சிறப்பு தனி விமானத்தில், ரஜினியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

author-image
WebDesk
New Update
ரஜினி அமெரிக்கா பயணம்: தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக நடிகர் ரஜினி, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம அலையின் தீவிரம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தில் தடை தொடரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினி. இந்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதிக்காக கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக இரு மத்திய அமைச்சர்களை ரஜினி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இரு மத்திய அமைச்சர்களில் ஒருவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அவரிடம் தமிழிலேயே உரையாடி உள்ளாராம் ரஜினிகாந்த்.

மேலும், 14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட அந்த சிறப்பு தனி விமானத்தில், ரஜினியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகாக, சிறிது காலம் அங்கு ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே, ரஜினியின் தனி விமானப் பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாகவும் தெரிய வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America Central Government Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment