சென்னையில் இன்று காலையில் முதல் சில இடங்களில் பால் தாமதமாக கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு உள்ளிட்ட இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த காலதாமத்திற்கு வருந்துவதாகவும், இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்திழைப்பை அளிக்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் ஆவின் நிர்வாகம் 15 லிட்டர் பாலை தினமும் விநியோகம் செய்கிறது என்பது குறிப்பிடதக்கது.
”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“