அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை நேரமின்மை காரணமாக சிறப்பு அமர்வின் வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதியே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனா, புகார்தாரர் வித்யாகுமார் என்பவர் செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை நேரமின்மை காரணமாக சிறப்பு அமர்வின் வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழை (09.04.2025) அறிவித்துள்ளது.
மேலும், வழக்கு விசாரணைக்கான வேறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி எஸ். அபய் ஓகா தெரிவித்தார்.