Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை ஏன் புதுப்பிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு; வழக்கை மீண்டும் ஏன் விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி

author-image
WebDesk
New Update
Tamil Nadu Minister Senthil Balaji talked about Velumani Arrest

Supreme court asks why not revive graft cases against SenthilBalaji: தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது இரு கூட்டாளிகளும் சமரசம் செய்து கொண்டதன் அடிப்படையில், வேலை வாங்கி தருவதாக செய்த மோசடி குற்றச்சாட்டில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் தனக்கு அரசு வேலை வழங்காமல், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க தகுதிப் பட்டியலில் சேர்த்திருந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அமைச்சரின் தனி உதவியாளர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது சகோதரர் அசோக்குமார், தனி உதவியாளர் சண்முகன் மற்றும் எம்டிசி ஊழியர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 2019 இல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வேலை வாங்கி தருவதாக 40 லட்சம் ரூபாய் வசூலித்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பின்னர் ஏமாற்றப்பட்டவர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர், பின்னர் 2021 இல், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் பணம் செலுத்தும் சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர். சமரசம் மற்றும் சண்முகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி கிரிமினல் வழக்கை ரத்து செய்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், பிசி சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை ரத்து செய்வதற்கு கட்சிகளுக்கு இடையே சமரசம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளை மீறி உயர்நீதிமன்றம் செயல்பட்டதாக கூறினார்.

விஸ்வநாதன், வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் வாதிட்டபோது, ​​ரத்து செய்யப்பட்ட வழக்கில் பல விண்ணப்பதாரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின் பேரில் தகுதிப் பட்டியலை மாற்றியதால், தகுதியுடைய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை இழந்தனர் என்று குறிப்பிட்டனர். தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, சண்முகன் மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஏன் திரும்பப் பெறவில்லை என்பதை காரணம் காட்டுமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment