அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னையில் அ.தி.க.வினர் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவதன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பி.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வில் ஓ.பி.எஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தீர்ப்பளித்தது.
மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“