Advertisment

மீண்டும் வெடித்துள்ள வன்முறை... மணிப்பூர் ஐகோர்ட்டுக்கு சென்னை நீதிபதியை பரிந்துரைத்த கொலீஜியம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அங்குள்ள ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக நியமிக்க சென்னையின் மூத்த நீதிபதியை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court Collegium recommends Madras High Court Judge D Krishnakumar for Manipur High Court chief justice

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. நாட்டையே உலுக்கிய இந்தக் கலவரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். 

Advertisment

இந்த சம்பவத்துக்குப் பிறகும், மணிப்பூரில் டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. 

இந்நிலையில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

பரிந்துரை 

இத்தகைய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் டி. கிருஷ்ணகுமாரை மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வருகிற 21 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கும் சூழலில், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

நீதிபதி டி.கிருஷ்ணகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Madras High Court Manipur High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment