Advertisment

பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சஹி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

Patna High Court Chief Justice A.P.Sahi transper to Madras HC:உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சஹியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
new chief justice Amreshwar Pratap Sahi,chennai high court new chief justice, justice Amreshwar Pratap Sahi, madras high court new chief justice,புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு, சென்னை உயர் நீதிமன்றம், புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி, new chief justice will swear on november 11, madras high court, அமரேஷ்வர் பிரதாப் சஹி, governor of tamilnadu banwarilal prohit

Patna High Court Chief Justice A.P.Sahi transper to Madras HC: உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சஹியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானி மேகாலாய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாறுதலாக மறுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தல் மற்றும் பணியிட மாற்றம் செய்கிற உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு அக்டோபர் 15 ஆம் தேதி பரிசீலனை செய்தது. அதன் பிறகு, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணி இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்தது.

இதன் மூலம், விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சஹி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai High Court Madras High Court Supreme Court Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment