சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்த்ததாக காவல்துறையினர் அவர் மீது 2024 ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், “இதுபோன்ற படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல; மற்றவர்களுக்கு அனுப்புவது குற்றச் செயல்” எனத் தெரிவித்தார்.
மேலும் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக குழந்தைகள் நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்ற கொடூரமான கருத்துக்களை கூற முடியும்?” எனக் கூறி தனது கருத்தை பதிவு செய்தார்.
மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடெஷ் தனது கருத்தை 3 வாரத்துக்குள் திரும்ப பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“