செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்; 10 நாட்களில் பதில் தர கெடு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court condemns Senthil Balaji give 10 days time to reply Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023  ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 14 மாதங்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி இருந்த நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை  தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. 

Advertisment

இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி. அவர் வெளியே வந்த சில நாட்களிலே அவருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா மற்றும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா எனக் கேட்டு பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு, "இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என குறிப்பிட்ட உத்தரவு இல்லை. இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வழங்குங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

அதற்கு நீதிபதிகள், "அவகாசம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம்? ஆனால் அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். 

மேலும் கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை, அதற்காக நீங்கள் அதனை அனுகூலமாக எடுத்துக்கொள்வீர்களா?. இது சரியான நடைமுறை அல்ல, இவ்வாறு தொடர்ச்சியாக காலம் தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க முடியாது" என்று கூறினர். 

இதனைத்தொடர்ந்து, 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.  இதனால் விரைவில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Supreme Court senthil balaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: