கோவை ஈஷா மையத்தில் இருக்கும் தனது மகள்களை மீட்டு தரக்கோரி தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைித்த உச்சநீதின்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், ஈஷா தொடர்பான வேறு எந்த வழக்குகளுக்கும், இந்த உத்தரவின் குறுக்கீடு என்று விளக்கமும் அளித்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா மையத்தில் உள்ள தனது இரு மகள்கள் கீதா (42), லதா (39) ஆகியோரை மீட்டு தர மீட்டு தர வேண்டும் என்று கோரி, ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது.
இதற்கு பதில் அளித்த ஈஷா மையம், அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்தின் பேரிலேயே இங்கு தங்கியிருப்பதாகவும், அவர்களின் தந்தை மீது அதிருப்தி இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில், "ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடத்த நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,"நிலுவை வழக்குகளை சட்டப் படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் இந்த இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது. அந்த "2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கோவை காவல்துறை சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா மையத்தின் பேரில் பதிவு செய்ப்பட்ட வழக்குகளின் விபரங்களை குறிப்பிட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“