scorecardresearch

சென்னை ஐகோர்ட்டுக்கு 9 புதிய நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மொத்தம் 75 நீதிபதிகளின் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டுக்கு 9 புதிய நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை

ஆறு வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று மாவட்ட நீதிபதிகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மொத்தம் 75 நீதிபதிகளின் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவுடன் சேர்த்து 52 நீதிபதிகள் பணியில் இருக்கின்றனர்.

காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தில் 18 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்.ஜான் சத்யன், வி.லட்சுமிநாராயணன், எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, ஆர்.நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல் மாவட்ட நீதிபதிகளான பி.வடமலை, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 3பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Supreme court nominated 9 judges for chennai high court

Best of Express