தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமலாக்கத் துறை ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது.
தொடர்ந்து, அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது.
இதன்படி, அவரது நீதிமன்ற காவல் வரும் 26ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கிடையாது என கபில் சிபல் வாதிட்டார்.
இதற்கு துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“