Advertisment

மத்திய அரசு எந்த நிலத்தையும் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்த அறிவிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்தவும் (ஏற்கெனவே இருக்கும் சாலை மற்றும் நெடுஞ்சாலை அல்ல) ஒரு நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அமைத்து அறிவிக்க மத்திய அரசு முழு திறன் உடையது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது

author-image
WebDesk
New Update
மத்திய அரசு எந்த நிலத்தையும் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்த அறிவிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்தவும் (ஏற்கெனவே இருக்கும் சாலை மற்றும் நெடுஞ்சாலை அல்ல) ஒரு நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அமைத்து அறிவிக்க மத்திய அரசு முழு திறன் உடையது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது

Advertisment

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) சட்டம், 1956 இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை உச்ச நீதிமன்றம் ஆதரித்துள்ளது.

பாரத்மலா பரியோஜ்னா - முதல் கட்டம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.காவில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி, ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், “ஒரு சாலை அல்லது ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலை இல்லை என்று அரசியலமைப்பில் எந்தவொரு பகுதியையும் அறிவிக்க ஒரு சட்டத்தை உருவாக்க நாடளுமன்றத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிமன்றம் கூறுகையில், “ஒரு நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவது தொடர்புடைய எல்லா விஷயங்களையும் அங்கீகரித்து செயல்படுத்தும் சட்டமன்றத்தின் அதிகாரம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் இருக்க வேண்டிய சட்டங்கள் குறித்து அரசியலமைப்பில் உள்ள விதிகள் சந்தேகத்திற்கு இடமின்றி அதைக் காட்டுகின்றன. அதே காரணத்துக்காக, முழுமையான நிறைவேற்று அதிகாரமும் மத்திய அரசுக்கு உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, உச்ச நீதிமன்ற அமர்வுக்கு சுட்டிக்காட்டியது, “ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மக்களின் நலனை மேம்படுத்துவதற்கும் அரசியலமைப்பின் நான்காம் பாகத்தின் கீழ் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை மனதில் கொண்டு புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க கட்டமைக்க சுதந்திரம் உள்ளது. அவர்களுக்கு போதுமான வாழ்வாதார வழிவகைகளை வழங்குதல், பொதுவான நன்மைகளை வழங்குவதற்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சிறந்த முறையில் பொருள் வளங்களை விநியோகித்தல் ஆகியவற்றுக்கும் கடமை உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்லும் பகுதியில் புதிய பொருளாதார வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.

“மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் ஒரு நெடுஞ்சாலை அமைவது நிலையான அபிவிருத்திக்கும், மனித நல்வாழ்வின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும் வழிவகுக்கிறது. அங்குள்ள குடிமக்கள் ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பதற்கான வசதிகளைச் செய்தல், சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் இன்றைய வாய்ப்புகளுக்கான அணுகுதல்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கைக்கான விருப்பங்களை நிறைவேற்றுவது.” ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டத்தின் பிரிவு 3 (A) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு சுற்றுச்சூழல் அனுமதிக்குப் பிறகுதான் செயல்படுத்தப்பட முடியும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் ஆட்சேபனைக்கு உட்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை அமைப்பதற்கான விளை நிலங்களால் மத்திய அரசால் பெறமுடியாது என்றும், முன்பே இருக்கும் மாநில நெடுஞ்சாலையை மட்டுமே அவ்வாறு அறிவிக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கான பிரிவு 3 (ஏ) இன் கீழ் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில் 10 கி.மீ. வனப்பகுதி வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து இந்த அறிவிப்பு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆர்வத்தின் வெளிப்பாடு மட்டுமே என்றும், அதை வழங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Nadu Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment