Advertisment

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு: சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court order interim stay on ponmudi surrender assets case Tamil News

பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ponmudi | supreme-court: வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பொன்முடி சார்பில் மூத்த வக்கீல் இ.சி.அகர்வலாவும், அவரது மனைவி விசாலாட்சி சார்பில் வக்கீல் புல்கித் தாரேவும் மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், வயதுமூப்பை கருத்தில் கொண்டு சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ponmudi Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment