Advertisment

'ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதியை தந்த கடவுளுக்கு நன்றி': அமைச்சர் பொன்முடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

அமைச்சர் பொன்முடி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “கடவுளுக்கு நன்றி, நம்முடைய அமைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் உள்ளனர்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
supreme court of india

'ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதியை தந்த கடவுளுக்கு நன்றி': அமைச்சர் பொன்முடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

அமைச்சர் பொன்முடி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “கடவுளுக்கு நன்றி, நம்முடைய அமைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் உள்ளனர்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Thank God we have judges like Justice Venkatesh’: SC refuses to entertain Tamil Minister Ponmudi’s plea against HC order on revision in D A case

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வழக்குத் தொடுப்பவர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விதத்தை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து இடமாற்றம் செய்து விடுவித்ததற்கு உச்ச நீதிமன்றம் அவருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், -சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அப்போதைய தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் டி ராஜா, பவானி சுப்பராயன் அமர்வு வழங்கிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வேலூருக்கு வழக்கை மாற்றிய உத்தரவுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்று கூறினார். 

“கடவுளுக்கு நன்றி, நம்முடைய அமைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் உள்ளனர். நடந்ததையைப் பாருங்கள். தலைமை நீதிபதி விசாரணையை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றுகிறார். அந்த அதிகாரம் எங்கே இருக்கிறது? விசாரணையை மாற்றுவதற்கு நிர்வாக அதிகாரம் இல்லை.” என்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் ஆகஸ்ட் 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி செய்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தனது அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, “இது ஒரு நீதித்துறை அதிகாரம்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களை விடுவித்ததற்கு எதிராக ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மறுவிசாரணை செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற அமர்வு, உயர்நீதிமன்றத்தில் தனது வாதங்களை வைக்கலாம் என்று வழக்கறிஞர் கபில் சிபல் இடம் கூறியது.

நிர்வாக உத்தரவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய கபில் சிபல்,  “விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் ரத்து செய்துள்ளார் என்ற எளிய காரணத்திற்காக என்னால் வாதிட முடியாது” என்றும் கூறினார். “இந்த மாதிரியான நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது என்கிறார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். 

இதற்கு தலைமை நீதிபதி, “அவர் (நீதிபதி வெங்கடேஷ்) சொல்வது முற்றிலும் சரி” என்றார்.

உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், “தற்போதைய நிலையில் சிறப்பு விடுப்பு மனுக்களை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. தனி நீதிபதி முன் அனைத்து தகுந்த குறைகளையும் வலியுறுத்த மனுதாரர்களுக்கு சுதந்திரம் இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் இந்த ஆட்சேபனைகளை நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காத ஒற்றை பெஞ்ச் அவர்களின் சொந்த தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.” என்று கூறினார்.

பொன்முடியின் மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, நிர்வாக உத்தரவுக்கும் தனது கட்சிக்காரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

இருப்பினும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்காக நீதிமன்றம் கூறியதையே மீண்டும் உச்ச நீதிமன்றம் கூறியது.  “நான் சொன்னது போல், இந்த வழக்கின் நீதிபதியைப் போன்ற நீதிபதிகள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதற்காக நம்முடைய அமைப்புக்கு கடவுளுக்கு நன்றி.” என்று கூறினார்.

அப்போது இந்த வழக்கில் இடையீட்டாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பொன்முடி ஒரு பதவியில் உள்ள அமைச்சர் என்பதை சுட்டிக்காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அரசு கூட்டுச் சேர்ந்ததாகக் கூறினார். அமிகஸ் கியூரி அல்லது சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார், ஆனால், உச்ச நீதிமன்றம் அதை முடிவெடுக்க உயர்நீதிமன்றத்திற்கு விட்டு விட்டது. 

கடந்த 1996-2001-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை 2002-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ponmudi Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment