மதுரை வரம்புக்குள் வரும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்குள் வரும் நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்குள் வரும் நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme court vijay camp stampede

ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 27-ந் தேதி கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித்தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது.

இவை விஜய், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது. த.வெ.க. தரப்பு கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment
Advertisements

கரூர் கூட்ட நெரிசலுக்கு சில ரவுடிகளால் முன்கூட்டியே திட்டமிட்ட சதியே காரணம் என்பதை மறுக்க முடியாது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரூர் சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அக்டோபர் 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களையும் அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார். மேலும், இதனுடன் அதன்படி இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. 

கரூர் கூட்ட நெரில் தொடர்பான வழக்கில் த.வெ.க தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். 

அப்போது, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு வரம்புக்குள் விசாரிக்க வேண்டும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது. அப்படி விசாரிக்க வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி அனுமதி பெற்றதாக தகவல் இல்லை என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதால் விஜய் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது தெரிவித்துள்ளார். இந்த கூற்று முற்றிலும் தவறானது என்றும் காவல்துறை பாதுகாப்புடன் விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார் என்று வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதத்தை முன்வைத்தார். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், விஜய மற்றும் த.வெ.க எதிர்மனு தாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனரா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு த.வெ.க தரப்பில்,  “உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில், த.வெ.க-வோ, விஜயோ எதிர் மனுதாரராக இல்லை. த.வெ.க-வோ, விஜயோ எதிர் மனுதாரராக இல்லாதபோது எதற்காக எங்களைப் பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில், விஜயின் தலைமைப் பண்பு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் விஜய்யைப் பற்றி அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளது என்று வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம்  வாதிட்டார்.

சம்பவம் நடந்த பிறகு, காவல்துறைதான் விஜயை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் அதன் பேரில்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றாதாகவும் த.வெ.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை த.வெ.க நிர்வாகிகள் பார்ப்பதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த விசாரனை மீது நம்பிக்கை குறைவாக உள்ளது. உண்மை நிலை வெளியே கொண்டுவர வேண்டும்.

நாங்கள் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை எதிர்க்கவில்லை. காவல்துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அமைத்ததை எதிர்க்கிறோம்.  

அதனால், உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரி தலைமையில் அமைத்திருக்கும் எஸ்.ஐ.டி-க்கு மாற்றாக, உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என த.வெ.க தரப்பில் முன்வைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி மூலம் உண்மை வெளிவராது தமிழக வெற்றி கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

இதையடுத்து பரப்புரை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்று ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

பரப்புரை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது. இதற்கு 41 பேர் உயிரிழந்து உள்ளதால் தான் சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பாதிக்கப்பட்டது. 

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

மேலும், ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

மாநில காவல்துறை அதிகாரி தலைமையிலான எஸ்.ஐ.டி மீது நம்பிக்கை இல்லை என்ரு த.வெ.க உச்ச நீதிமன்றத்தில் கூறியதற்கு, “கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ரா கார் சிறந்த அதிகாரி; அவர் சி.பி.ஐ-யில் பணியாற்றியுள்ளார். அவரை பரிந்துரைத்தது உயர்நீதிமன்றம் தான் என்றும் விஜய் தாமதமாக வந்ததே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தினார். நடிகர் விஜய் நண்பகல் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் மாலை 7 மணிக்குத்தான் வந்ததால் மக்கள் கூட்டம் நீண்ட நேரம் காத்திருந்து இந்தச் சம்பவம் நடந்தது என்று வில்சன் கூறினார்.

சி.பி.ஐ விசாரணை கோரிய மற்ற மனுக்கள் குறித்து, மாநில அரசின் சார்பில் ஆஜரான டாக்டர் ஏ.எம். சிங்வி, மாநில காவல்துறையால் கடுமையான தவறுகள் நடந்ததாகக் கண்டறியப்படாத நிலையில், சி.பி.ஐ விசாரணைக்குச் சாதாரணமாக உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த, சம்பவத்தில் தனது 10 வயது மகனை இழந்த மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாம சேஷாத்ரி நாயுடு, காவல்துறை தாங்களாகவே முன்வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தங்களைக் குற்றமற்றவர்கள் என்று அறிவித்ததாகக் குற்றம் சாட்டினார்.

சி.பி.ஐ விசாரணையைக் கோரிய மற்றொரு வழக்கறிஞர் ராகவாச்சாரி, மேலும் சில குற்றச்சாட்டுகளை வைத்தார்:

காவல்துறை ஒரு சமூக விரோதியை மக்கள் கூட்டத்திற்குள் காலணியைத் தூக்கி எறிய அனுமதித்தது என்றும், இதுவே தடியடிக்கு வழிவகுத்தது என்றும், இதனால் கூட்ட நெரிசல் திட்டமிட்டு நடந்ததாகக் குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு இரவில் எப்படிப் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

அதே இடத்தில் அ.தி.முக பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விஜய்யின் பரப்புரை கூட்டத்துகு மட்டும் அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாநில அரசு அனுமதி வழங்கிய விதம் குறித்து நீதிபதி மகேஸ்வரி, "பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்படும் வரை அனுமதி வழங்க வேண்டாம் என்று உத்தரவு இருந்தும், ஏன் அனுமதி வழங்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "நள்ளிரவில் நான்கு மணி நேரத்தில் பிரேதப் பரிசோதனையை நடத்தினீர்களா? எத்தனை பிரேதப் பரிசோதனை மேசைகள் உள்ளன?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் கோரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததால், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இரவு நேரத்தில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது என்று வில்சன் பதிலளித்தார்.

அமர்வு எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக வில்சன் உறுதியளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி மகேஸ்வரி, "நாங்கள் என்ன உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்று பார்ப்போம். உத்தரவு ஒத்திவைக்கப்படுகிறது," என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Supreme Court TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: