ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எல்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்ற தினகரன் தரப்பு வழக்கில் ஓ.பி.எஸ் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வருகிறது.
ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு
இந்நிலையில் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து நாளை வழக்கம்போல் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
டிடிவி தரப்பு மற்றும் திமுக தொடர்ந்துள்ள இந்த வழக்கில் ஓ.பி.எஸ் உட்பட மதுரை தெற்கு சரவணன், மேட்டூர் செம்மலை, மேட்டுப்பாளையம் சின்னராஜ், மயிலாப்பூர் ஆர்.நட்ராஜ், கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, ஸ்ரீவைகுண்டம் மாணிக்கம், வாசுதேவநல்லூர் மனோகரன், ஆவடி பாண்டியராஜன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.