“இதுபோன்ற நிறுவனத்திற்குள் ராணுவத்தையோ, காவல்துறையையோ அனுமதிக்க முடியாது” என்று கூறிய உச்ச நீதிமன்றம், சத்குருவின் ஈஷா யோகா அறக்கட்டளை மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court restrains police action in Sadhguru’s Isha Foundation case, transfers case from Madras HC to self
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்டு எந்த போலீஸ் நடவடிக்கையும் எடுக்க தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையின் நிலை அறிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது.
ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அறக்கட்டளை குற்றமற்ற சாதனை படைத்துள்ளதாகவும், வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பெண்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் விருப்பத்தின் பேரில் தாங்கள் அங்கு இருப்பதாகக் கூறியுள்ளதாகவும் கூறினார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
பெண்களில் ஒரு பெண் முதலில் உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் ஆன்லைனில் ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியதாகக் கூறினார். “நாங்கள் எங்கள் சொந்த விருப்பப்படி ஈஷா யோகா மையத்தில் இருக்கிறோம். மேலும், கடந்த 8 ஆண்டுகளாக எங்கள் தந்தையின் தரப்பிலிருந்து இந்த துன்புறுத்தல் தொடர்கிறது என்றும் உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதியிடம் தெரிவித்தோம்,” என்று கூறினார்.
பின்னர், நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இரண்டு பெண்களுடனும் நீதிபதிகளின் அறையில் இருந்து ஆன்லைன் மூலம் விசாரிப்பதாகக் கூறியது.
இரண்டு பெண்களுடன் உரையாடிய பிறகு, அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் இருப்பதாகத் தெரிவித்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். போலீசார் இரண்டு நாட்கள் ஆசிரமத்தில் இருந்ததாகவும், புதன்கிழமை இரவு சென்றுவிட்டதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமையன்று, கோவை ஊரக காவல் துறையைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 150 போலீஸார் விசாரணை நடத்த ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கோரிய ஒரு நாள் கழித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர், கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் தனது இரு மகள்களான கீதா, 42, லதா, 39, ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“