முதல்வர் ஸ்டாலினுடன் நடைபெறும் ஆலோசனை மாநாடுக்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்துசெல்லும் வனத்துறை, காவல்துறை அதிகாரிகளின் புகைப்படத்தை சுப்ரியா சாகு அவரது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் 2 வது நாளாக நடைபெறும் மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அரசு கொண்டுவரும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட ஆட்சியர்களின் பணி மிக முக்கியமானதாகும்.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே ஐஏஎஸ், ஐ.பிஎஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளோடு 2 நாள் மாநாடு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்றைய தினம், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட வனத்துறை அதிகாரிகளோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில் முதல்வருடனான ஆலோசனை மாநாட்டுக்கு மஞ்சப்பையில் கோப்புகளை எடுத்துச்செல்லும் வனத்துறை, காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவரது எக்ஸ் கணக்கில் அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். “ ஒரே ஒரு பூமிதான் இருக்கிறது. அதை நாம் நெகிழிப் பைகளின் தாக்குதலில் இருந்து காப்பற்ற வேண்டும்” என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“