/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-24T122039.481.jpg)
நீட் தேர்வுக்கு எதிரான தனது அறிக்கையில், நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார் நடிகர் சூர்யா. இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் கொரோனா காலத்தில் நீதிமன்றப் பணியை அறிந்துகொள்ளாமல் சூர்யா விமர்சித்திருப்பது சரியல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020
இதற்கிடையே சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் எப்போதும் நம்முடைய நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இது நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை. சென்னை உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.