”நிச்சயமாக குழந்தையை மீட்போம்” – பெற்றோர்களுக்கு விஜயபாஸ்கர் ஆறுதல்

மீட்பு பணிகளை துரிதப்படுத்திவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பலரும் பாராட்டிவருகின்றனர்.

By: Updated: October 28, 2019, 05:46:39 PM

Sujith rescue operation : மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து  அங்கேயே இருந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்திவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பலரும் பாராட்டிவருகின்றனர்.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பிரிட்டோ என்பவரின் குழந்தை சுஜித் விட்டு தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுவினகளின் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மேலும் படிக்க : சிறுவன் சுஜித்தினை மீட்பதில் ஏன் இத்தனை தாமதம்?

குழந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து தகவல் அறிந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று குழந்தையை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டார். இவரையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் அங்கே அங்கே சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தையை மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று முன்தினம் முதல் மீட்பு பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டியிலேயே இருந்தார். தீயணைப்பு படை வீரர்கள், மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு தனது அலுவல் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் நடுக்காட்டுப்பட்டிக்குச் சென்று குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். குழந்தையை மீட்க தேவையான உபகரணங்களைக் கொண்டுவருவதற்கு ஆவணம் செய்தார். இதையடுத்து குழந்தையின் பெற்றொர்கள் பிரிட்டோ, கலாமேரி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
“நாங்கள் சுஜித்தை மீட்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எப்படியும் மீட்டு கொண்டுவந்துவிடுவோம். நீங்கள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று கூறினார். அமைச்சரின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக இருந்தது.

குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பணிகள் சமூக ஊடகங்களில் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

தற்போதுகூட மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து மீட்பு பணிகளை பார்வையிடுவதோடு அவர்களுடனேயே இருந்து வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Surjith rescue opreation save surjithminister vijayabahaskar supervising rescue mission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X