சுஜித்தை மீட்க தடையாக இருக்கும் Quartz Crystalline பாறைகள் – அதிர வைக்கும் பின்னணி

sujith borewell trichy rescue operation updates : நீங்கள் மற்ற வகை பாறைகளை உடைத்தாலும், 100 அடி ஆழம் ஏற்படுத்தும் போது, Charnockite பாறைகள் இருந்தால், அதை உடைக்க முடியாது

By: Updated: October 28, 2019, 05:35:01 PM

Sujith Borewell Rescue Operation : முதலில் போர்வெல் இயந்திரம், பிறகு ரிக் இயந்திரம், பிறகு அதிநவீன ரிக் இயந்திரம், பிறகு மீண்டும் போர்வெல் மூலம் துளை என்று அதிகாரிகளை ஒருமுடிவு எடுக்க முடியாமல் திணறடித்துக் கொண்டிருப்பது நடுக்காட்டுப்பட்டியில், சுஜித் தோட்டத்திற்கு கீழ் அமைந்துள்ள பாறைகள் தான்.


இது Quartz Crystalline Rocks என்று அழைக்கப்படுகிறது. அதாவது அதிகளவு குவார்ட்ஸ் தனிமம் நிறைந்த பாறைகள் என்பதால் இது குவார்ட்ஸ் கிறிஸ்டலைன் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாறை தான் மீட்புப் படையினரின் உழைப்பை தற்போது உறிஞ்சு கொண்டிருக்கிறது.

பொதுவாக பாறைகள்,

igneous rocks,

metamorphic rocks,

sedimentary rocks

என்று மூன்று வகைப்படும்.

இந்த குவார்ட்ஸ் கிறிஸ்டலைன் ராக்ஸில், அணுக்களின் பிணைப்பு (Atoms Bonding) மிக மிக வலிமையாக இருக்கும். இதனால், அந்த பாறைகளை Borewell முறையில் உடைப்பது அதைவிட மிக கடினமான பணி என்றே நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தஞ்சை, கும்பகோணம் போன்ற பகுதிகளில் இருப்பது போன்ற பாறைகள் அல்ல இந்த Quartz Crystalline பாறைகள். சுமார், 230 கோடி பழமையான பாறைகள் மணப்பாறையைச் சுற்றியுள்ள பாறைகள் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதன் உறுதித் தன்மை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வலிமையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

மீட்புக் குழுவின் போர்வெல் முயற்சி சாத்தியமா?

தற்போது மீட்புக் குழு எடுத்திருக்கும் முயற்சி, அரை அடி விட்டத்தில் ஆறு குழிகள் அமைக்கின்றனர். அதன் பிறகு, ரிக் இயந்திரம் மூலம் அந்த ஆறு குழிகளையும் ஒன்றாக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், வட்டமாக ஆறு இடங்களில் குழிகள் தோண்டி, பாறைகளில் துளையிட்டாலும், நடு நடுவே இருக்கும் பாறைகளை ரிக் இயந்திரம் மூலம் உடைக்க முடியுமா? என்பது பெரும் சந்தேகம் என்றே நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, Charnockite எனும் பாறைகளை உடைப்பது, அறுப்பது என்பது வாய்ப்பே இல்லாத ஒன்று என்று கூறுகின்றனர். நீங்கள் மற்ற வகை பாறைகளை உடைத்தாலும், 100 அடி ஆழம் ஏற்படுத்தும் போது, Charnockite பாறைகள் இருந்தால், அதை உடைக்க முடியாது என்று நிலவியல் ஆய்வாளர் சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Surjith trichy borewell rescue process sujith rescue operation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X